📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 29, 2026 12:32 PM

இந்திய அணியே வேண்டாம்.. நான் கேகேஆர் அணிக்கே திரும்பி போறேன்.. கம்பீர் நண்பர் அதிரடி முடிவு

இந்திய அணியே வேண்டாம்.. நான் கேகேஆர் அணிக்கே திரும்பி போறேன்.. கம்பீர் நண்பர் அதிரடி முடிவு

இந்திய அணியே வேண்டாம்.. நான் கேகேஆர் அணிக்கே திரும்பி போறேன்.. கம்பீர் நண்பர் அதிரடி முடிவு

கொல்கத்தா: நெதர்லாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ரியான் டென் டோஷேட், நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது புதிய Head of Cricket Strategy ஆக நியமித்துள்ளது. இதன் மூலம், ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் பல வெற்றிகளைப் பெற்ற அதே ஃபிரான்சைஸ் அணிக்கு அவர் மீண்டும் திரும்புகிறார்.

தனது புதிய பொறுப்பில், உலக அளவில் இயங்கி வரும் நைட் ரைடர்ஸ் அணிகளின் கிரிக்கெட் உத்திகள், வீரர்களைக் கண்டறிதல், வீரர்களைத் தேர்வு செய்தல், அணித் திட்டமிடல் மற்றும் வீரர்களின் திறமைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை டென் டோஷேட் வழிகாட்டி நடத்துவார். மேலும், சிபிஎல் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், ஐஎல்டி20 தொடரில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் மேஜர் லீக் கிரிக்கெட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளின் உதவிப் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றுவார்.

இது குிற்தது பேசிய நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர், "டெண்டோவை மீண்டும் நைட் ரைடர்ஸ் குடும்பத்திற்கு வரவேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்களது கொள்கைகளைப் பற்றிய அவரது ஆழமான புரிதலும், உலகளாவிய ஃபிரான்சைஸ் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு உள்ள அனுபவமும் அவரை இந்தப் பொறுப்பிற்கு மிகவும் பொருத்தமானவராக மாற்றுகிறது. நைட் ரைடர்ஸ் குழுமத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை வடிவமைக்க அவர் பெரிதும் உதவுவார்" என்று கூறினார்.

தனது புதிய பொறுப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த டென் டோஷேட், "நைட் ரைடர்ஸ் அணியில் இந்தப் பொறுப்பை ஏற்று மீண்டும் இணைவதில் நான் மிகுந்த உற்சாகமடைகிறேன். எங்களது உலகளாவிய அணிகளின் பயிற்சியாளர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், இளம் வீரர்களைக் கண்டறிந்து மேம்படுத்தும் முறைகளை வலுப்படுத்துவதற்கும், நீண்ட கால கிரிக்கெட் உத்திகளை உருவாக்குவதற்கும் இது ஒரு தனித்துவமான வாய்ப்பாகும்" என்று தெரிவித்தார்.

டென் டோஷேட் முதன்முதலில் 2011 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒரு வீரராக இணைந்தார். மேலும், 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அந்த அணி ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றபோது அணியில் இடம்பெற்றிருந்தார். பின்னர், 2022 இல் பயிற்சியாளராக மீண்டும் திரும்பிய அவர், 2024 ஆம் ஆண்டில் நைட் ரைடர்ஸ் அணி தனது மூன்றாவது ஐபிஎல் கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்கு வகித்தார். தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தப் புதிய பொறுப்பு, நைட் ரைடர்ஸ் குடும்பத்துடனான அவரது நீண்ட கால உறவின் மற்றொரு முக்கிய அத்தியாயமாக அமைந்துள்ளது.