📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 23, 2026 12:02 PM

இந்திய ஜெர்சியை பெறும்முன் ரகு காலில் விழுந்து வணங்கிய வைபவ் சூர்யவன்ஷி.. நெகிழ்ச்சி சம்பவம்

இந்திய ஜெர்சியை பெறும்முன் ரகு காலில் விழுந்து வணங்கிய வைபவ் சூர்யவன்ஷி.. நெகிழ்ச்சி சம்பவம்

இந்திய ஜெர்சியை பெறும்முன் ரகு காலில் விழுந்து வணங்கிய வைபவ் சூர்யவன்ஷி.. நெகிழ்ச்சி சம்பவம்

டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அறிமுகமாக உள்ள இந்திய இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, தனது இந்திய அணியின் ஜெர்சியைப் பெறுவதற்கு முன்பாக த்ரோ-டவுன் நிபுணர் ரகுவின் காலில் விழுந்து ஆசி பெற்ற நெகிழ்ச்சியான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

வருகிற வெள்ளிக்கிழமை அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது. இதற்கிடையில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு இந்திய அணியின் த்ரோ-டவுன் நிபுணர் ரகு இந்திய ஜெர்சியை எடுத்துச் சென்றார்.

கதவைத் திறந்து ரகுவை வரவேற்ற வைபவ், உடனே அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். பின்னர் ஜெர்சியை கையில் எடுத்துப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டார். இந்தக் காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்துப் பேசிய வைபவ், "இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. முதன்முதலில் கிரிக்கெட் பேட்டை கையில் பிடித்த நாளில் இருந்து நான் கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது. ஜெர்சியைப் பார்த்தவுடன் என்னால் புன்னகையை நிறுத்த முடியவில்லை. நாம் கற்பனை செய்திராத ஒன்று திடீரென நடக்கும் போது எப்படி எதிர்வினையாற்றுவது என்றே நமக்குத் தெரியாது. அப்படித்தான் எனக்கும் இருந்தது" என்று நெகிழ்ந்தார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் அதிரடியாக விளையாடி சதம் விளாசிய வைபவ், அண்மையில் முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி 776 ரன்கள் குவித்தார். இதன் மூலம் விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல் போன்ற சீனியர் வீரர்களை முந்தி, மிகக் குறைந்த வயதில் 'ஆரஞ்சு தொப்பி' வென்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இந்த அசாத்திய திறமையால் தான் அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை ஏ அணிக்கு எதிராக 29 பந்துகளில் 94 ரன்கள் விளாசி தனது அதிரடி ஃபார்மை வைபவ் நிரூபித்தார். இன்னும் மூன்று நாட்களில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் வைபவ் களம் இறங்கினால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய வரலாற்று மைல்கல்லை எட்டிப்பிடிப்பார்.