📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 27, 2026 05:20 AM

இந்திய தூதரக அதிகாரிக்கு தமிழ் சங்கத்தினர் நன்றி

இந்திய தூதரக அதிகாரிக்கு தமிழ் சங்கத்தினர் நன்றி

இந்திய தூதரக உயர் அதிகாரி (Counselor personal) முத்து ராமச்சந்திரன் தாய்லாந்தில் அவரது பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றி தற்போது இந்தியா திரும்புகிறார். அவருக்கு தாய்லாந்து தமிழ்ச்சங்கம் சார்பாக இதயம் கனிந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தாய்லாந்து தமிழ்சங்க செயற்குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து தெரிவித்துக் கொண்டனர்.கடந்த மூன்று ஆண்டுகளில், தாய்லாந்து தமிழ்ச்சமூகத்திற்கும் தாய்லாந்து தமிழ்ச்சங்கத்திற்கும் அவர்கள் வழங்கிய அன்பான ஆதரவு, ஊக்கம் மற்றும் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டத்தக்கதாகும். சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு அவர்கள் அளித்த பங்களிப்பும், எப்போதும் அணுகக்கூடிய அவரின் அன்பான அணுகுமுறையும் தாய்லாந்து தமிழ் சமூகத்தில் நீங்கா நினைவாக இருக்கும்.