📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 16, 2026 06:35 PM

இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

வெல்லிங்டன்

இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

நியூசிலாந்து நாட்டின் 9-வது பெரிய சரக்கு ஏற்றுமதி நாடாக இந்தியா உள்ளது. இந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில், இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மசோதா இன்று நிறைவேறி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் ஆதரவும் கிடைத்துள்ளது. இதன்படி, 93-29 என்ற வாக்குகள் கணக்கில் மசோதா நிறைவேறியுள்ளது.

வரி விலக்கு

ரூ.1.91 லட்சம் கோடி

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையேயான இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம், அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 855 கோடி (2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்) மதிப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் நியூசிலாந்து ஒப்பந்தம் செய்துள்ளது.