📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 31, 2026 06:00 PM

IPL 2026 Final: விராட் கோலி கிடையாது.. இந்த வீரர் தான் ஆட்டநாயகன் விருது வெல்வார்.. டிவில்லியர்ஸ் கணிப்பு

IPL 2026 Final: விராட் கோலி கிடையாது.. இந்த வீரர் தான் ஆட்டநாயகன் விருது வெல்வார்.. டிவில்லியர்ஸ் கணிப்பு

IPL 2026 Final: விராட் கோலி கிடையாது.. இந்த வீரர் தான் ஆட்டநாயகன் விருது வெல்வார்.. டிவில்லியர்ஸ் கணிப்பு

அகமதாபாத்: ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி தொடர்பாக தனது கணிப்புகளை முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், வெளியிட்டுள்ளார். அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார் 'ஆட்ட நாயகன்' விருதை வெல்வார் என அவர் கணித்துள்ளார். மேலும், பட்டிதார் 200-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் அடிப்பார் என்றும் டிவில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் 'ஆட்ட நாயகன்' விருது வென்றவர் பட்டிதார். அப்போட்டியில் அவர் 33 பந்துகளில் 93* ரன்கள் (9 சிக்சர்கள், 5 பவுண்டரிகள்) அடித்து RCB-ஐ 254/5 என்ற ஸ்கோரைப் பெற உதவினார். இச்சீசனில் 14 போட்டிகளில் 486 ரன்கள் (சராசரி 44.18, ஸ்டிரைக் ரேட் 196.76) குவித்து, அவர் மிரட்டலான பார்மில் உள்ளார்.

டி வில்லியர்ஸ் தனது நண்பரும், முன்னாள் ஆர்சிபி சக வீரருமான விராட் கோலியும் இறுதிப் போட்டியில் ஒரு அரைசதம் அடிப்பார் என கணித்துள்ளார். ஏற்கனவே ஐந்து 50+ ஸ்கோர்களுடன் இச்சீசனில் 15 போட்டிகளில் 600 ரன்கள் (சராசரி 50, ஸ்டிரைக் ரேட் 164.38) குவித்து கோலி அபார பார்மில் உள்ளார்.

மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானுக்கு இறுதிப் போட்டியில் 'மோசமான நாள்' அமையும் என டி வில்லியர்ஸ் கணித்துள்ளார். ரஷித் 10-க்கும் அதிகமான எகானமியை வாரி வழங்குவார் என அவர் நம்புகிறார். குவாலிஃபையர் 1-ல் ஆர்சிபி-க்கு எதிராக 3 ஓவர்களில் 29 ரன்களையும், குவாலிஃபையர் 2-ல் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 2 விக்கெட் இல்லாத ஓவர்களில் 45 ரன்களையும் அவர் விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ரஷித்தின் ஒட்டுமொத்த சீசன் ஆட்டம் ஏற்றத்தாழ்வுகளுடன் உள்ளது. அவர் 16 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, 25.84 சராசரி மற்றும் 9.29 எகானமி ரேட்டைப் பதிவு செய்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி வெல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் டிவில்லியர்ஸ் கணித்துள்ளார்.