📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 29, 2026 09:00 AM

IPL 2026 GT vs RR: வைபவ் அதிக ரன் எடுத்தால் குஜராத் காலி.. பேட்டிங்கை நம்பி ஜெயிக்க முடியாது

IPL 2026 GT vs RR: வைபவ் அதிக ரன் எடுத்தால் குஜராத் காலி.. பேட்டிங்கை நம்பி ஜெயிக்க முடியாது

IPL 2026 GT vs RR: வைபவ் அதிக ரன் எடுத்தால் குஜராத் காலி.. பேட்டிங்கை நம்பி ஜெயிக்க முடியாது

சண்டிகர்: ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் இன்று (மே 29) இரவு சண்டிகர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக இது அமைந்துள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி மிரட்டல் ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்த சீசனில் அசுர வேகத்தில் ரன் குவித்து வருகிறார். ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் அதிவேக சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். அவர் மட்டுமின்றி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், தசுன் ஷனகா என ராஜஸ்தான் அணியில் அதிரடி பேட்டர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். இவர்களை ஆரம்பத்திலேயே வீழ்த்தாவிட்டால், ராஜஸ்தான் அணி இமாலய இலக்கை எட்டிவிடும்.

குஜராத் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் சுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரையே அந்த அணி மலைபோல நம்பியுள்ளது. இதில் பட்லரைத் தவிர மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், 250 'ஸ்டிரைக் ரேட்' வேகத்தில் ரன் குவிக்கக் கூடியவர்கள் இல்லை. எனவே, பேட்டிங் திறமையை மட்டும் நம்பி குஜராத் அணியால் ராஜஸ்தானை வீழ்த்துவது கடினம்.

குஜராத் அணியின் பலமே அதன் பந்துவீச்சுதான். ககிசோ ரபாடா, முகமது சிராஜ், ரஷித் கான் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ரஷித் கான் மற்றும் ஹோல்டர் ஜோடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது. அதேபோன்ற ஒரு வித்தையை அவர்கள் இன்றும் செய்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

டாஸ் முக்கியம்

குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். முதலில் பேட்டிங் செய்து 220 ரன்களுக்கு மேல் எடுத்தால், அதை தற்காத்துக் கொள்ளும் பலம் குஜராத் பந்துவீச்சாளர்களிடம் உள்ளது. மாறாக, ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 250 ரன்களை குவித்துவிட்டால், அதை துரத்திப் பிடிப்பது குஜராத் அணிக்கு எட்டாத கனவாகிவிடும். ஏனெனில், 240 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணிக்கப்பட்ட கடந்த சில போட்டிகளில் குஜராத் அணி படுதோல்வி அடைந்துள்ளது.

வரலாற்று ரீதியாக பார்த்தால் ராஜஸ்தான் அணிக்கு எதிராக குஜராத் அணி வலுவாக உள்ளது. இவ்விரு அணிகளும் மோதிய 10 போட்டிகளில் 7 முறை குஜராத் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 2022 ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் சாம்பியன் பட்டம் வென்றது. அந்த பழைய நினைவுகள் குஜராத் வீரர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கக்கூடும். எனினும், தற்போதைய ஃபார்மில் ராஜஸ்தான் வலுவாக இருப்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.