📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 05, 2026 12:01 PM

இப்படி ஒரு ரன் அவுட் உங்க வாழ்க்கையில பார்த்திருக்க மாட்டீங்க.. கோபத்தில் உதைத்த பந்தால் ரன் அவுட்

இப்படி ஒரு ரன் அவுட் உங்க வாழ்க்கையில பார்த்திருக்க மாட்டீங்க..  கோபத்தில் உதைத்த பந்தால் ரன் அவுட்

இப்படி ஒரு ரன் அவுட் உங்க வாழ்க்கையில பார்த்திருக்க மாட்டீங்க.. கோபத்தில் உதைத்த பந்தால் ரன் அவுட்

டெல்லி: டிபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஃபீல்டிங்கில் தவறிழைத்த விரக்தியில் வீரர் ஒருவர் உதைத்த பந்து, எதிர்பாராதவிதமாக ஸ்டம்பில் பட்டு ரன் அவுட் ஆன வினோதமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லி பிரீமியர் லீக் தொடரில் நடந்த இந்த பரபரப்பான ஆட்டத்தில், ஃபீல்டிங்கில் சொதப்பிய கோபத்தில் நியூ டெல்லி டைகர்ஸ் அணியின் ஹிம்மத் சிங் உதைத்த பந்து நேராக ஸ்டம்பில் பட்டு ஆட்டம் டை ஆனது. பின்னர் நடந்த சூப்பர் ஓவரில் அவுட்டர் டெல்லி வாரியர்ஸ் அணி த்ரில்லர் வெற்றி பெற்றது.

கிரிக்கெட் வரலாற்றில் பல வினோதமான ரன் அவுட்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், டெல்லி பிரீமியர் லீக் தொடரில் நடந்த இந்த ரன் அவுட் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நியூ டெல்லி டைகர்ஸ் அணியின் ஹிம்மத் சிங், கடைசி பந்தில் பந்தைத் தவறவிட்ட விரக்தியில் கோபமாக உதைக்க, அது நேராக ஸ்டம்பில் பட்டு ஆட்டம் டை ஆனது.

அவுட்டர் டெல்லி வாரியர்ஸ் அணிக்கு கடைசி பந்தில் வெற்றி பெற ஒரு ரன் தேவைப்பட்டது. அப்போது அந்த அணி 155/8 என்ற நிலையில் இருந்தது. பந்துவீச்சாளர் லட்சுமண் வீசிய யார்க்கர் பந்தை பேட்ஸ்மேன் பிரதம சாலுஜாவால் மிட்ஆஃப் திசையில் மட்டுமே தட்டிவிட முடிந்தது. அங்கு நின்றிருந்த ஹிம்மத் சிங் ஓடிவந்து பந்தைப் பிடிக்க முயன்றார், ஆனால் பந்து அவரது கைகளில் படாமல் நழுவிச் சென்றது.

பேட்ஸ்மேன் சாலுஜா ரன் எடுக்க ஓடிக்கொண்டிருந்தபோது, ஹிம்மத் சிங் தனது தவறை உணர்ந்து ஏமாற்றமடைந்தார். பின், மிகுந்த ஆத்திரத்தில் பந்தைக் காலால் உதைத்தார். அது நேராக ஸ்டம்பின் அடிப்பகுதியில் பட்டு பெயில்களை வீழ்த்தியது. பேட்ஸ்மேன் தனது ரன்னை நிறைவு செய்வதற்குள் இந்த ரன்அவுட் நிகழ்ந்தது.

இந்த நம்ப முடியாத ரன் அவுட் காரணமாக, மழையால் 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்த ஆட்டம் 155 ரன்களுடன் சமனில் முடிந்தது. எனினும், அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் சூப்பர் ஓவரில் அவுட்டர் டெல்லி வாரியர்ஸ் அணி சிறப்பாக விளையாடி, இந்த சீசனின் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.