📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 07, 2026 04:32 PM

இரு மாநில பிரச்சனை என்பதால் காவிரி விவகாரத்தில் தீர்வு ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது

இரு மாநில பிரச்சனை என்பதால் காவிரி விவகாரத்தில் தீர்வு ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது

இரு மாநில பிரச்சனை என்பதால் காவிரி விவகாரத்தில் தீர்வு ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: சட்டப்பேரவையில் பேசிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினரான பிரேமலதா விஜயகாந்த், மக்கள் விரும்பும் திட்டங்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் தொடர வேண்டும் என்றார். நீட், மேகதாது, காவிரி விவகாரங்களுக்கு முதல்வர் டெல்லி சென்று பேச வேண்டும். தண்ணீருக்காக யாரிடமும் கை ஏந்தும் நிலை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும். பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

நெல் கொள்முதல் செய்வதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும், விவசாயிகளின் துயரத்தை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். விவசாயிகளின் நிலை புரிந்து நெல் மூட்டைகளை நனையாமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.

பின்னர் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், காவிரி பிரச்சனைக்கு தீர்வு ஒன்றிய அரசிடம் தான் உள்ளது. எனவே காவிரி விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் அழைத்து கொண்டு முதல்வர் டெல்லிக்கு சென்று அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி அனைத்து கட்சி உறுப்பினர்களை டெல்லி அழைத்து சென்றால் அதற்கு ஒத்துழைக்க தேமுதிக தயாராக இருப்பதாக கூறினார். இதை நாங்கள் சொல்லி இருக்கிறோம்,, பிரதமரை சந்திக்க முதல்வர் முடிவெடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.