📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news September 23, 2026 06:04 AM

 புறக்கணித்த ஊடகங்கள்; டிரம்ப் பெயரில் புது சேனல்

 புறக்கணித்த ஊடகங்கள்; டிரம்ப் பெயரில் புது சேனல்

வாஷிங்டன்: வேண்டுமென்றே எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி, 'சி.என்.என்., - எம்.எஸ்., நவ் - பொலிடிகோ' உட்பட குறிப்பிட்ட சில டிவி செய்தி நிறுவனங்களின் நிருபர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதை தடை செய்து, அவற்றின் பத்திரிகையாளர்களுக்கான அனுமதியை சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார்.

இதையடுத்து, அதிபரின் பங்கேற்கும் நிகழ்வுகளின் வீடியோ ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தடைவிதிக்கப்பட்ட செய்தி ஊடகங்கள் அறிவித்தன.

இந்த முடிவுக்கு முக்கிய அச்சு ஊடகங்கள் மற்றும் புகைப்பட இதழியல் செய்தி நிறுவனங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தன. மேலும், அவைகளும் அதிபரின் நிகழ்வுகளை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன.

இதற்கிடையே, 'டிரம்ப் டிவி' என்ற பெயரில் வெள்ளை மாளிகை, புதிய சேனலை துவக்கி, அதிபர் தொடர்பான நிகழ்ச்சிகளை அதில் ஒளிபரப்பியது.