📅 Sunday, 07 June 2026 IST | வைகாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 07, 2026 10:00 AM

இத்தாலி மற்றும் பிரான்ஸ் அரசு தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய திருத்தந்தை

இத்தாலி மற்றும் பிரான்ஸ் அரசு தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய திருத்தந்தை

இத்தாலி மற்றும் பிரான்ஸ் அரசு தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய திருத்தந்தை

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஜூன் 6, சனிக்கிழமையன்று ஸ்பெயினுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தான் விமானத்தில் பயணம் செய்யும்போது தான் எந்தெந்த நாடுகளின் வான் பரப்பை கடந்து செல்கிறாரோ அந்த நாடுகளின் தலைவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி தந்தி மூலம் வாழ்த்துகளையும், அந்நாட்டு மக்களுக்காகத் தனது இறைவேண்டல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இத்தாலி நாட்டின் அரசுத் தலைவர் செர்ஜியோ மட்டரெல்லா அவர்களுக்கு அனுப்பிய செய்தியில், ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் ஊற்றான இறைவனிடம் மனிதகுலத்தை அழைத்துச் செல்லும் அன்னை மரியாவின் தாயன்பின் பராமரிப்பில் தான் ஸ்பெயினுக்குப் புறப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தாலிய தேசம் முழுவதற்கும் நல்வாழ்வும் செழிப்பும் கிடைக்கத் தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் இறைவேண்டல்களையும் அவர் உறுதியளித்தார்.

பிரான்ஸ் வான்பரப்பின் மேல் பயணம் செய்த போது, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அந்நாட்டின் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரன் அவர்களுக்கும் பிரான்ஸ் மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். அதிபரின் அண்மைய வத்திக்கான் வருகையை நன்றியுடன் நினைவுகூர்ந்த திருத்தந்தை, பிரான்ஸ் நாட்டிற்கு அமைதி மற்றும் மகிழ்ச்சி எனும் கொடைகளை அருள வல்லமையுள்ள இறைவனை வேண்டிக்கொண்டார்.

திருத்தூதுப் பயணங்களின் போது கடந்து செல்லும் நாடுகளின் மீதான நெருக்கத்தை வெளிப்படுத்தும் நீண்டகால திருத்தந்தையின் மரபின்படி இந்தத் தந்திகள் அனுப்பப்பட்டன. மேலும் அந்தந்த நாட்டு மக்களையும் தலைவர்களையும் இறைவனின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் அவர் ஒப்படைத்தார்.