📅 Tuesday, 04 August 2026 IST | ஆடி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 04, 2026 03:01 AM

இடுப்பு தசைநார் கிழிந்து.. கடவுள் கொடுத்த ஓய்வு.. நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்னாச்சு?

இடுப்பு தசைநார் கிழிந்து.. கடவுள் கொடுத்த ஓய்வு.. நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்னாச்சு?

சென்னை: முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் 'மைசா' கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான நடனப் படப்பிடிப்பு நடைபெற்றபோது, எதிர்பாராத விதமாக ராஷ்மிகா கீழே விழுந்தார். இதில் அவரது வலது பக்க இடுப்பு பகுதியில் உள்ள முக்கிய தசைநார் கிழிந்து 'காயமடைந்தார். இதனால் அவர் 6 வாரங்களுக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உருக்கமான பதிவு: இதுகுறித்து ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், காயங்கள் ஏற்படுவது மிகவும் மோசமான விஷயம். இது யாருக்கும் தெரியக்கூடாது என்றுதான் நினைத்தேன்... ஆனால் என்ன செய்வது? கொஞ்ச காலம் தலைகாட்டாமல் இருந்ததற்கு மன்னிக்கவும். தொடர்ந்து எனக்கு காயம் ஏற்படும் இது 3-வது முறை. என் உடலை ஒரு இயந்திரமாகப் பார்க்காமல் மனித உடலாக பராமரிக்க நான் கற்றுக்கொள்ள வேண்டும். 'மைசா' படத்திற்கான நடன படப்பிடிப்பின் போதுதான் இது நடந்தது. நான் நடித்ததிலேயே மிகவும் கஷ்டமான கடுமையாக உழைப்பை கொடுத்தது இந்த படத்தில் தான்.

கடவுள் கொடுத்த கட்டாய ஓய்வு: என் வலது இடுப்பில் உள்ள ஒரு தசைநார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை தூக்க முடியவில்லை. அந்த தசைநார் மீண்டும் இணையும் வரை ஓய்வு தேவை. வலி இருக்கிறது, ஆனால் தாங்க முடியாத அளவுக்கு இல்லை. நீயாக ஒருபோதும் ஓய்வு எடுக்கமாட்டாய், அதனால் நானே உனக்கு ஓய்வு தருகிறேன் என்று கடவுள் கொடுத்த ஓய்வு. இப்போது கட்டாய ஓய்வில் இருக்கிறேன். உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால் நான் நிறைய சாப்பிட்டு 'டெசர்ட் மான்ஸ்டர்' ஆகிவிடுவேனோ என்ற பயத்தில் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்கிறேன். நிறைய புதிர்களைத் தீர்த்து நேரத்தை கழித்து வருகிறேன். கவலைப்படாதீர்கள், விரைவில் மீண்டு வருவேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகா இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் பாலர் வர் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்துக்கை கூறி வருகின்றனர்.