📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 01, 2026 11:32 PM

இவர் தான் என் காதலர்.. சர்ச்சைக்குரிய ஆன்மீகப் பேச்சாளரை கட்டிப்பிடித்து.. காதலை உடைத்த மிருணாளினி!

இவர் தான் என் காதலர்.. சர்ச்சைக்குரிய ஆன்மீகப் பேச்சாளரை கட்டிப்பிடித்து.. காதலை உடைத்த மிருணாளினி!

சென்னை: டப்ஸ்மாஷ் மூலம் சினிமாவிற்கு வந்து எனிமி, ரோமியோ படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளையடித்த நடிகை மிருணாளினி ரவி, தற்போது தன் காதலரை சோஷியல் மீடியாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். அது வேறு யாருமல்ல... கடந்த ஆண்டு அரசுப் பள்ளிச் சர்ச்சையில் கைதான ஆன்மீகப் பேச்சாளர் மகா விஷ்ணு தான் என்பது தெரியவந்துள்ளது.

மாலை டம் டம் ஜோடி: இணையத்தில் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் வெளியிட்டு அதன் மூலம் லைக்குகளை அள்ளிய மிருணாளினி ரவிக்கு, விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சாம்பியன், விஷாலுடன் எனிமி போன்ற படங்களில் நடித்தார். குறிப்பாக 'எனிமி' படத்தில் இடம்பெற்ற "மாலை டம் டம்" பாடல் இவரை உலகளவில் டிரெண்டாக்கியது. இவர் கடைசியாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக 'ரோமியோ' படத்தில் நடித்திருந்தார்.

காதலரை கட்டிப்பிடித்து பதிவு: 'ரோமியோ' படத்திற்குப் பிறகு பெரிதாகப் படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், மிருணாளினி ரவி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை அப்லோடு செய்து ஒட்டுமொத்த இளசுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். அதில், தன் காதலரை இறுக்கமாகக் கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, உன்னை நேசிப்பது இறுதியாக என்னை நானே நேசிப்பது போல உணர்கிறேன். ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நான் எப்போதும் உன்னையே தேர்ந்தெடுப்பேன் என உருகி உருகி காதலோடு பதிவிட்டுள்ளார்.

ஆன்மீகப் பேச்சாளருடன் காதலா: நடிகை மிருணாளினி ரவி, காதலராக அறிமுகப்படுத்தியுள்ள ஆன்மீக பேச்சாளரான மகா விஷ்ணு, கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மறுபிறப்பு மற்றும் கர்மா, பாவ புண்ணிய பலன்கள் குறித்து பேசினார். மேலும், மாற்றுத் திறனாளியாக பிறக்க முன்ஜென்ம பாவங்களே காரணம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கர் என்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், மகாவிஷ்ணுவுக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.