📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 05, 2026 02:03 AM

ஜேசன் சஞ்சயின் “சிக்மா” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜேசன் சஞ்சயின் “சிக்மா” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பரியா அப்துல்லா ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கேத்ரின் தெரசா ஒரு துள்ளலான பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார்.

இந்நிலையில், ‘சிக்மா’ படம் இரண்டு நாட்களில் ரூ. 5 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

Taking in the cheers, the smiles, and all the love. ❤️‍🔥 Straight from the #Sigma theatre visit. 🤩#SigmaInCinemasNow@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 @saregamasouth pic.twitter.com/PcHzgqLKOT