ஜன நாயகன், கருப்பு வசூலை முறியடிக்குமா ஜெயிலர் 2?.. அட்வான்ஸ் புக்கிங் வசூல் எப்படி இருக்கு?
சென்னை: டிக்கெட் முன்பதிவு தொடங்கியதுமே ஜெயிலர் 2 படத்துக்கு பெரிதாக டிக்கெட் புக்கிங் இல்லை என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது புக் மை ஷோவில் ஆட்டமே மாறியுள்ளது. ஜெயிலர் 2 திரைப்படம் மாயாஜாலில் அத்தனை ஸ்க்ரீன்களிலும் ஆரஞ்சு அலர்ட்டில் காணப்படுகிறது.
பிவிஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டர், சத்யம் பிவிஆர் எல்லாம் ஹவுஸ்ஃபுல் போர்டை முதல் நாளுக்கு இப்போதே பல இடங்களில் மாட்டிவிட்டனர். ஒரு சில சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் இன்னமும் காலை 8.30 மணி, 9 மணி FDFS காட்சிகளுக்கான டிக்கெட் கிடைத்து வருகின்றன.
எப்படி இருந்தாலும், இன்றை மாலைக்குள் முதல் நாள் டிக்கெட் மொத்தமும் ஹவுஸ்ஃபுல் ஆகி, முதல் வாரம் வரை பல ஷோக்கள் ஹவுஸ்ஃபுல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைத் தாண்டி இந்தி, தெலுங்கில் எல்லாம் புரமோஷன் இல்லை என்கிற குறை நிலவினாலும் ஓவர்சீஸ் டிக்கெட் புக்கிங் ஜெட் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. கேரளாவில் செம மாஸ் புக்கிங் நடைபெற்று வருகிறது.
ஜன நாயகன், கருப்பு வசூலை தாண்டுமா?: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்த நிலையிலேயே 500 கோடி வரை வசூல் வந்ததாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் எப்படி இருந்தாலும், கண்டிப்பாக 600 முதல் 800 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக 300 கோடி கிளப்பில் உள்ள விஜய்யின் ஜன நாயகன் மற்றும் சூர்யாவின் கருப்பு படங்களின் வசூலை முதல் 3 நாட்களுக்குள் ஜெயிலர் 2 கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 நாள் தொடர் வசூல் வேட்டை: ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகை அடுத்த வாரம் திங்கள், செவ்வாய்க்கிழமை வரவுள்ளதால் பொங்கல் விடுமுறை போல செம ஜாக்பாட்டான ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் ஜெயிலர் 2வுக்கு செட் செய்துள்ளது. இந்த வார வியாழன் ரிலீஸ் ஆகும் ஜெயிலர் 2 திரைப்படம் அடுத்த வாரம் செவ்வாய் வரை விடுமுறை என்பதால் ஜெட் வேகத்தில் ஓடும் என்கின்றனர். நெல்சன் படத்தை மட்டும் தரமாக கொடுத்து விட்டால், 1000 கோடி வசூலை தொடும் முதல் தமிழ் படமாகவும் ஜெயிலர் 2 மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்வான்ஸ் புக்கிங் வசூல்: உலகளவில் அட்வான்ஸ் புக்கிங்கில் இதுவரை 35 கோடி வசூலை கடந்துள்ளது ஜெயிலர் 2 என தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளாவில் மட்டும் 4.5 கோடி வசூலை கடந்துள்ளதாம். மேலும், அக்டோபர் 15ம் தேதி அதிகபட்சமாக 90 முதல் 100 கோடி ஓபனிங் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.