ஜன நாயகன் தனித்துவமான வெற்றி.. டாக்ஸிக் பட விழாவில் கேவிஎன் தயாரிப்பாளர் ஓபன் டாக்!
சென்னை: முதலமைச்சர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், உலகம் முழுவதும் 320 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவான ஜன நாயகன் படம் மொத்தமும் லீக்கான நிலையில், 1.2 கோடி மக்கள் அதை டவுன்லோடு செய்து பார்த்ததாக காவல் துறை அறிவிப்பு வெளியிட்ட நிலையிலும், ஜன நாயகன் திரைப்படத்தை தியேட்டருக்குச் சென்று மக்கள் பார்த்து கொண்டாடிய நிலையில், ஜன நாயகன் திரைப்படம் தனித்துவமான வெற்றிப் படம் என நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற டாக்ஸிக் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், கேவிஎன் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா பேசினார்.
தளபதி ரசிகர்கள் அவரது வீடியோவை வைரலாக்கி ஜன நாயகன் திரைப்படம் நஷ்டம் இல்லை, அது மிகப்பெரிய வெற்றிப் படம் என சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.
ஜன நாயகன் மேடையான டாக்ஸிக் விழா: சென்னைக்கு வந்த யஷ் முதலமைச்சர் விஜய்யை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியொரு சந்திப்பு நடந்தது போல தெரியவே இல்லை. ஆனால், நேற்று நீண்ட கால தாமதத்துக்குப் பிறகு இரவு தொடங்கப்பட்ட டாக்ஸிக் விழாவில் பங்கேற்ற யஷ் முதல் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா வரை ஜன நாயகன் மற்றும் முதலமைச்சர் விஜய் பற்றி பேசி டாக்ஸிக் மேடையை ஜன நாயகன் மேடையாகவே மாற்றினர்.
ஜன நாயகன் வெற்றிப் படம்: நடிகராக உச்சத்தில் இருந்த தளபதி விஜய்க்கு அதிகபட்சமாக ஜன நாயகன் படத்துக்காக 270 கோடி ரூபாய் சம்பளம் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. விஜய் சம்பளத்தையும் சேர்த்து படத்தின் பட்ஜெட் 400 முதல் 500 கோடி என சொல்லப்பட்டது. படம் வெளியான நிலையில், பாக்ஸ் ஆபீஸில் மட்டும் 320 கோடிக்கும் அதிகமான வசூல் குவிந்தது. ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ உள்ளிட்ட உரிமங்கள் மூலமாக போட்ட பணத்தை எடுத்திருப்பார்கள் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படம் தனித்துவமான வெற்றிப் படமாக மாறியது. உலகம் முழுவதும் உள்ள விஜய் சார் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி என்று பேசினார்.
மீண்டும் நடிக்க வேண்டும்: விஜய் சார் ஒன் லாஸ்ட் டைம் ஆன் ஸ்க்ரீன் என சொல்லி ஜன நாயகன் படத்தில் நடித்தார். ஆனால், அவர் மீண்டும் இன்னொரு படமும் பண்ண வேண்டும் என்பதே எனது ஆசை, ரசிகர்களாகிய உங்கள் ஆசையும் அதுவாகவே இருக்கும் என நினைக்கிறேன் என்றும் கேவின் தயாரிப்பாளர் பேசி தளபதி ரசிகர்களை கவர் செய்துள்ளார். டாக்ஸிக் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. பிவிஆர் உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களிலும் தமிழ்நாட்டில் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகியுள்ளது.