இன்றைய ராசிபலன்.....எந்த ராசிக்கு யோகம் தெரியுமா?
இன்றைய ராசிபலன்.....எந்த ராசிக்கு யோகம் தெரியுமா?
இன்றைய ராசிபலனில் மேஷம் முதல் மீனம் வரை குடும்பம், பணவரவு, செலவுகள், உடல்நலம் மற்றும் தொழில் தொடர்பான பலன்கள் இடம்பெற்றுள்ளன.
புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படலாம். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட கூடுதல் லாபம் கிடைக்கும். அதேநேரம், திடீர் செலவுகளும் ஏற்படலாம்.
பல வகைகளிலும் அனுகூலமான நாள். பிள்ளைகள் விரும்பியதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கலாம். குடும்பத்தினருடன் தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றி மனநிம்மதி பெறுவீர்கள். நண்பர்கள் மூலம் திடீர் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பிற்பகலுக்குமேல் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படலாம். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளுங்கள்.
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படலாம். சகோதரர்கள் வகையில் எதிர்பாராத சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. மாலையில் உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் சற்று சங்கடத்தை ஏற்படுத்தலாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.
தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு பின்னர் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிப்பது மகிழ்ச்சி தரும். சக வியாபாரிகள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பும் உள்ளது.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. மாலையில் குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரம் வழக்கம்போல நடைபெறும்.
இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். குடும்பத்தினரின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடைபெறும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படலாம்.
விருச்சிகம்:
தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம் எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. விற்பனை வழக்கம்போல இருக்கும்.
சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் விரும்பியதை வாங்கித் தருவீர்கள். சகோதரர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. முக்கிய முடிவுகளை எடுக்கும்போது குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.
அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதரர் வகையில் செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவது அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் தொடர்புகொண்டு பேசுவது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். தாயின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்கு சிறிய அளவில் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். இளைய சகோதரரால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.