📅 Tuesday, 28 July 2026 IST | ஆடி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 28, 2026 12:30 PM

ஜனநாயகன் மாஸ் performance .....பாக்ஸ் ஆஃபிஸில் இடம் பிடித்ததா? இல்லையா?

ஜனநாயகன் மாஸ் performance .....பாக்ஸ் ஆஃபிஸில் இடம் பிடித்ததா? இல்லையா?

ஜனநாயகனை கவிழ்த்த மாணவர்கள்.... படுத்துபோன box office collection....!

முதலமைச்சர் விஜயின் இறுதிபடமான ஜனநாயகன் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்று தெரியுமா?

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி பொங்கலுக்கு வருவதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் தொடர்பான பல சிக்கல்களால் திரைப்படம் வெளியாகமல் படம் திட்டமிட்டப்படி பொங்கலுக்கு வெளியகாமல் தள்ளிப் போனது.

இதற்கிடையில் நடந்த 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்போற்றார். இந்த சூழலில் பல்வேறு தடைகளை மீறி தணிக்கை சான்றிதழ் பெற்று கடந்த 23 ஆம் தேதி திரையில் ஜனநாயகம் திரைப்படம் களமிறங்கியது.

அனிரூத் இசையில் பூஜா ஹெக்டே,பாபி, தியோல்,பிரியாமணி,பிரகாஷ்ராஜ்,நரேன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் படத்தை கண்டு ரசித்தனர்.

இத்திரைப்படம் சுமார் 400 கோடிக்கு மேல் அதிகமான செலவில் தயாராகி வெளியான நிலையில் முதல் நாளிலேயே உலகளவில் ரூ 78 முதல் 80 கோடி வரை வசூல் செய்தது. இதில் இந்தியாவில் மட்டுமே ரூ 41 கோடி வசூல் ஆனது. 4 வது நாள் இந்தியாவில் ரூ 37.17 கோடி வசூலித்துள்ளது.

மாநிலங்களில் வாரியாக கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு: ரூ.22.50 கோடிகர்நாடகா: ரூ.4.75 கோடிகேரளா: ரூ.2.85 கோடிஆந்திரா – தெலங்கானா: ரூ.2.05 கோடிஇதர மாநிலங்கள்: ரூ.5.02 கோடி

இதன் மூலம் ஜனநாயகன் திரைப்படம் வெளியான முதல் வார முடிவிலேயே உலகளவில் ரூ 217.48 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.இதில் இந்திய வசூல் மட்டும் ரூ.145.98 கோடி, வெளிநாடுகளில் கிடைத்த வசூல் ரூ.71.50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இணையதளத்தில் படம் வெளியான நிலையிலும் ஏ சான்றிதழ் தாமத்தினாலும் இல்லையென்றால் இத்திரைப்படம் 250 கோடி வசூலை கடந்திருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறியுள்ளன.

இந்நிலையில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் தரப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.