📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 17, 2026 03:31 PM

ஜனநாயகன் ரிலீஸ்: எம்.ஜி.ஆருக்குப் பின் 49 ஆண்டுகள் கழித்து தமிழ் திரையுலகில் நிகழவிருக்கும் வரலாற்று அதிசயம்

ஜனநாயகன் ரிலீஸ்: எம்.ஜி.ஆருக்குப் பின் 49 ஆண்டுகள் கழித்து தமிழ் திரையுலகில் நிகழவிருக்கும் வரலாற்று அதிசயம்

ஜனநாயகன் ரிலீஸ்: எம்.ஜி.ஆருக்குப் பின் 49 ஆண்டுகள் கழித்து தமிழ் திரையுலகில் நிகழவிருக்கும் வரலாற்று அதிசயம்

தமிழ் திரையுலகில் சுமார் 49 ஆண்டுகளுக்கு பிறகு, விபரம் அறிந்த ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலோட எதிர்பார்த்துக் காத்திருந்த "முதலமைச்சர் நடிக்கும் திரைப்படம்" என்ற சிறப்புமிக்க டைட்டில் கார்டை காணும் தருணம் இறுதியாகக் கனிந்துள்ளது. கடந்த 1977 ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக பதவியேற்ற பின் அவரது 'மீனவ நண்பன்' மற்றும் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' திரைப்படங்கள் வெளியானதை அடுத்து, தற்போது 2026-ல் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் இறுதி திரைப்படமான 'ஜனநாயகன்' வரும் ஜூலை 23 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

தி நியூ இந்தியன் எஸ்பிரஸில் வெளியான செய்தி ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா இதுகுறித்து விவரித்துள்ளார்.

1977-ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, தனது 136-வது மற்றும் இறுதிப் படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை முடிக்க ஆளுநரிடம் 10 நாட்கள் அவகாசம் கேட்டுத் தனது பதவியேற்பு விழாவையே தள்ளி வைத்தார் என்பதை நினைவுகூர்ந்தார்.

அதேபோல, அன்று எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்திற்கு அப்போதைய ஆளும்கட்சியால் அரசியல் முட்டுக்கட்டைகள் போடப்பட்டதைப் போலவே, விஜய்யின் 69-வது மற்றும் கடைசிப் படமான 'ஜனநாயகன்' திரைப்படமும் தணிக்கைக் குழுவின் கடுமையான சோதனைகளை சந்தித்து தற்போது வெளியாகிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் டிராமா திரைப்படம், கடந்த ஜனவரி 9 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வேண்டியிருந்தது.

ஆனால், படத்தில் இடம்பெற்றிருந்த சில அரசியல் மற்றும் சமூகக் காட்சிகள் பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) படத்திற்குத் தடை விதித்தது.

இதனால் நிலவி வந்த பல மாத கால இழுபறி மற்றும் அரசியல் வட்டார ஊகங்களுக்கு விடை கொடுக்கும் வகையில், விஜய்யின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.