📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 22, 2026 06:34 PM

ஜப்தி நடவடிக்கை எடுத்தாலும் கடனை திருப்பி செலுத்த மாட்டோம்: விவசாய சங்கம் போர்க்கொடி

ஜப்தி நடவடிக்கை எடுத்தாலும் கடனை திருப்பி செலுத்த மாட்டோம்: விவசாய சங்கம் போர்க்கொடி

ஜப்தி நடவடிக்கை எடுத்தாலும் கடனை திருப்பி செலுத்த மாட்டோம்: விவசாய சங்கம் போர்க்கொடி

விவசாயிகளை கவனிக்கவில்லை என்றால், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படும் என விவசாய சங்க தலைவர் பெரியண்ணன் தெரிவித்தார்.

Published : July 22, 2026 at 4:48 PM IST

சேலம்: தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி பயிர்க்கடன்களை ரத்து செய்யவிட்டால், ஜப்தி நடவடிக்கை எடுத்தாலும் கடனை திருப்பி செலுத்தமாட்டோம் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், இன்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, மாநில முழுவதும் உள்ள விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்;

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்; கர்நாடக அரசிடம் உரிய தண்ணீரை பெற்று தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் பெரியண்ணன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், "தமிழக அரசு கடன் சுமையில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த போதும், பயிர்க் கடன் தள்ளுபடி என தேர்தலின் போது முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்தார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அந்த சமயத்தில், தமிழக அரசின் கடன் சுமையை நினைவூட்டி இருந்தார். ஆனால், ஓட்டுகளுக்காக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளை முதல்வர் விஜய் ஏமாற்றியுள்ளார்.

விவசாயிகளை கவனிக்கவில்லை என்றால், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படும். எனவே, தமிழக விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையென்றால், ஜப்தி நடவடிக்கை எடுத்தாலும் கடனை திருப்பி செலுத்த மாட்டோம்.

அதேபோல, பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45 எனவும், எருமை பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.65 எனவும் உயர்த்தி வழங்க வேண்டும்.

வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்கு பெற்றுத் தரவேண்டிய காவிரி தண்ணீரை உரிய சட்ட நடவடிக்கை எடுத்து பெற்று தர வேண்டும்" என பெரியண்ணன் கூறினார்.