ஜூன் 21 முதல் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து கடலூர் பேருந்துகள் இயக்கம்!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் மார்க்கமாக இயக்கம் செய்யப்பட்டு வரும் அனைத்து புறநகர் பேருந்துகளும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி 21.06.2026 ஞாயிற்றுகிழமை முதல்
திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் 6-வது நடைமேடையிலுள்ள 13 மற்றும் 14 ஆகிய நிறுத்தங்களிலிருந்து மத்திய பேருந்து நிலையம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பெரம்பலூர், தொழுதூர், திட்டக்குடி, விருத்தாச்சலம் வழியாக கடலூருக்கு இயக்கம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம். இதனை பயணிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண Facebook https://www.facebook.com/share/15fQCjhASKm/ Instagram https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag== Telegram https://t.me/trichyvision Threads https://www.threads.net/@trichy_vision Twitter https://x.com/VisionTrichy Youtube https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav