📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 08, 2026 05:34 PM

காசோலை மோசடி வழக்கு நடிகர் சரத்குமாருக்கு சம்மன்

காசோலை மோசடி வழக்கு நடிகர் சரத்குமாருக்கு சம்மன்

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தன்னுடைய தனிப்பட்ட கடனை திருப்பிச் செலுத்துவதற்காக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.2 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் சரத்குமார் காசோலை வழங்கியதாக தெரிகிறது.

வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது

ஸ்ரீகிருஷ்ணா அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, சரத்குமாரின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சரத்குமாருக்கு எதிராக ஸ்ரீகிருஷ்ணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.

செப்.10-ல் ஆஜராக உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், நடிகர் சரத்குமார் வருகிற செப்டம்பர் 10-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 10-ந் தேதி நடைபெற உள்ளது.