காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு
சென்னை: தமிழகத்தில் நேற்று காலை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 600 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில், 1,200 ரூபாய் உயர்ந்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,725 ரூபாய்க்கும், சவரன், 1,17,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று காலை, தங்கம் விலை கிராமுக்கு, 75 ரூபாய் குறைந்து, 14,650 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 600 ரூபாய் சரிவடைந்து, 1,17,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மாலையில், தங்கம் விலை கிராமுக்கு, 150 ரூபாய் உயர்ந்து, 14,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,200 ரூபாய் அதிகரித்து, 1,18,400 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 265 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.