மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சுமார் 360 கனஅடி சரிவு.!!
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சுமார் 360 கனஅடி சரிவு.!!
மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 7,094 கனஅடியாக சரிந்துள்ளது. 7,454 கனஅடியாக இருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சுமார் 360 கனஅடி குறைந்துள்ளது. இந்த நிலையில் அணையின் மொத்த உயரம் 120 அடியாக உள்ள நிலையில், தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.61 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் உபரி நீர் திறக்கப்பட்டு, ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சீராக உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 2000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே போல மேட்டூர் அணையின் நீர் இருப்பு தற்போது 52.207 டி.எம்.சி.யாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்குவதை அடுத்து, டெல்டா பாசன விவசாயத்திற்காக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு மேட்டூர் அணையைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.