காந்தி ஜெயந்தி
மகாத்மா காந்தி
குஜராத் மாநிலத்திம் போர்பந்தரில் 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிறந்தவர் காந்தி. இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதால் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளான அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியாக கொண்டாப்படுகிறது. இன்றை தினம் காந்தியின் 157-வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் தங்கள் புகழ் வணக்கத்தை செலுத்தி வருகின்றனர்.
எளிமை, நேர்மை, மனிதநேயம், சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைத் தனது வாழ்வின் நெறிகளாகக் கொண்டு, உலகம் முழுமைக்கும் அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்பிய மாமனிதராகத் திகழ்ந்தவர்.
தொடர்ந்து சமூகத்தோடு உரையாடினார். தொடர்ந்து தன்னையும் தன் கருத்துகளையும் மாறுபாட்டுக்கு உட்படுத்திக் கொண்டே வந்தார். ஆனால், உண்மையாக இருந்தார். அதனால்தான், 'என் வாழ்க்கையே நான் விட்டுச் செல்லும் செய்தி' என அவரால் கூற முடிந்தது.
அவரது பெருமையைப் போற்றும் வகையில், நமது திமுக ஆட்சியில் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தேன், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தைப் பழமை மாறாமல் புதுப்பித்தோம், உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதுகளை மீண்டும் வழங்கத் தொடங்கினோம்.
காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! அவரிடம் இருந்து கற்போம்! மதநல்லிணக்கம் போற்றும் இந்தியாவைக் காப்போம்!” என்று கூறினார்.