📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 22, 2026 04:30 PM

கார்களுக்கான ‘சிஓஇ’ கட்டணம் குறைந்தது

கார்களுக்கான ‘சிஓஇ’ கட்டணம் குறைந்தது

இரு வாரங்களுக்கு முந்திய ஏலக்குத்தகையில் உச்சம் தொட்ட சிறிய வகை கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்க் (சிஓஇ) கட்டணம், அண்மை ஏலக்குத்தகையில் சற்றே குறைந்தது.

சிறிய, ஆற்றல் குறைந்த மற்றும் மின்சார கார்களுக்கான ‘ஏ’ பிரிவு சிஓஇ கட்டணம் 129,000 வெள்ளியிலிருந்து 126,000 வெள்ளியாக இறக்கம் கண்டது.

அதுபோல, புதன்கிழமை (ஜூலை 22) நடந்த ஏலக்குத்தகையில் பெரிய வகை கார்களுக்கான ‘பி’ பிரிவிலும் சிஓஇ கட்டணம் 130,889 வெள்ளியிலிருந்து 0.8 விழுக்காடு குறைந்து, 129,890 வெள்ளியாகப் பதிவானது.

பொதுப் பிரிவு வாகனங்களுக்கான ‘இ’ பிரிவில் சிஓஇ கட்டணம் 0.1 விழுக்காடு கூடியது. முந்திய ஏலக்குத்தகையில் $129,801ஆக இருந்த அக்கட்டணம், $129,971ஆக அதிகரித்தது.

மோட்டார்சைக்கிள்களுக்கான ‘டி’ பிரிவில் சிஓஇ கட்டணம் ஒரே ஒரு வெள்ளி கூடி, $10,202ஆகப் பதிவானது.

வணிக வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் 1.2 விழுக்காடு குறைந்தது. முந்திய ஏலக்குத்தகையில் $95,000 என முடிந்த அக்கட்டணம், அண்மை ஏலக்குத்தகையில் $93,889 எனச் சரிவுகண்டது.