📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 15, 2026 01:34 PM

காற்றில் எந்தன் கீதம்... காணாத ஒன்றைத் தேடுதே!

காற்றில் எந்தன் கீதம்... காணாத ஒன்றைத் தேடுதே!

காற்றில் எந்தன் கீதம்... காணாத ஒன்றைத் தேடுதே!

‘ரசிகர்களை என்றைக்கும் ஏமாற்ற மாட்டேன். நான் நிகழ்ச்சிக்கு வருகிறேன்...’’ என்று சொன்ன ஜானகி, கைத்தாங்கலாக நிகழ்ச்சி நடந்த மேடைக்கு வந்து அமர்ந்தார்

“தன்னுடைய கானக் குரலால் தமிழ் சினிமா உலகைப் பல ஆண்டுக்காலம் கட்டிப்போட்ட மாபெரும் இசைப் பெண்மணி, இன்று நம்மோடு இல்லை. ஆனால், அவருடைய குரல், நம்மையெல்லாம் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் சூழ்ந்திருக்கும்.’’ - பிரபலப் பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவுக்குப் பிறகு, பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கருத்தாகப் பதிவிட்டிருந்தது.

ஜானகியின் தொழில் நேசிப்பு குறித்து, அந்தத் தயாரிப்பாளர் கூறுகையில், ‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜானகியை பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்காவுக்கு அழைத்திருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில நாள்களுக்கு முன்கூட்டியே அமெரிக்காவுக்குச் சென்றார் ஜானகி. அங்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். மருத்துவர்கள் சோதித்துவிட்டு, ‘இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது’ என்று சொல்லி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, சிகிச்சை அளித்தனர். ஒன்பது நாள்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனை யிலிருந்து திரும்பினார். எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தவரை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பார்க்கச் சென்றனர்.

‘உங்களைக் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி’ என்று சொல்லிவிட்டு ஜானகியிடம் பேசினர். அவர்கள் பேசும்போது, ‘இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. முடியும் என்றால், நீங்கள் நிகழ்ச்சிக்கு வந்து, மேடையில் முகம் காட்ட வேண்டும். பாட்டெல்லாம் பாடக்கூட வேண்டாம்’ என்று தயங்கித் தயங்கிச் சொன்னார்கள்.

காலத்தைக் கடந்தும் ஜானகியின் குரல் மட்டுமல்ல; அவருடைய தொழில்மீதான பக்தியும் பேசப்படும்்!