📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 05, 2026 06:00 PM

காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக

காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக

காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக - காங். தொண்டர்கள் இடையே வாக்குவாதம்

சென்னை: காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த போது திமுக- காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளுமுள்ளுவால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் பலர் இன்று காலை முதல் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முதல்வர் விஜய் மரியாதை செலுத்திய பின்பு திமுகவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து அதிமுக, அடுத்ததாக காங்கிரஸ் கட்சிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், முதல்வர் விஜய் மரியாதை செலுத்திவிட்டு சென்றார்.

அதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த வருவதாக இருந்தது. இதனால் அவரது வருகையை எதிர்நோக்கி திமுகவினர் கூடி நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் ஜமால் யூனுஸ் எம்எல்ஏ, ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர் துறைமுகம் ரவிராஜ், சிறுபான்மை பிரிவு அபுமூசா உள்ளிட்ட நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் வருவதற்குள்ளான இடைபட்ட நேரத்தில் மரியாதை செலுத்திவிட்டு சென்று விடலாம் என முயன்றதாக தெரிகிறது. இதற்கு அங்கிருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி நன்றி கூட தெரிவிக்காமல், தேர்தலுக்கு பின்னால் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததோடு கூட்டணியில் இணைவதாகவும் தெரிவித்தனர். இது திமுக- காங்கிரஸ் கட்சியினர் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை துரோகி என்று திமுகவினர் விமர்ச்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தான், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காயிதே மில்லத் நினைவிடத்துக்கு வந்த போது திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திய பிறகே செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்த வேண்டும் என கூறி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காங்கிரஸ் கட்சியை துரோகி என்று கூறி தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் நிர்வாகிகள் அங்கிருந்த பந்தலில் சற்று ஒதுக்கினர். இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திய பின்னர் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்த காங்கிரசார் மரியாதை செலுத்திவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் காயிதே மில்லத் நினைவிடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n