📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 16, 2026 01:04 PM

கே.எல். ராகுல் உடல்நிலை குறித்து வெளியான தகவல்

கே.எல். ராகுல் உடல்நிலை குறித்து வெளியான தகவல்

இலங்கைக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் 77 ரன்கள் எடுத்த இந்திய வீரர் கே.எல். ராகுல், காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதனால் இந்திய ரசிகர்களிடையே கவலை ஏற்பட்டது. இதனால் அவர் மீண்டும் பேட்டிங் செய்வாரா என கேள்வி எழுந்தது.

ஆனால் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், ராகுலின் உடல்நிலை குறித்து நல்ல தகவலை தெரிவித்துள்ளார். ராகுல் இப்போது நன்றாக இருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் 2-வது நாளில் ராகுல் மீண்டும் பேட்டிங் செய்ய வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த தகவல் இந்திய அணிக்கு நிம்மதியை அளித்துள்ளது