📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 28, 2026 07:04 AM

Kanimozhi : ‘பொதுச்செயலாளரா? செயல் தலைவரா?’ கனிமொழிக்கு திமுகவில் கிடைக்கப்போகும்

Kanimozhi : ‘பொதுச்செயலாளரா? செயல் தலைவரா?’ கனிமொழிக்கு திமுகவில் கிடைக்கப்போகும்

Kanimozhi : ‘பொதுச்செயலாளரா? செயல் தலைவரா?’ கனிமொழிக்கு திமுகவில் கிடைக்கப்போகும் பதவி என்ன ?

'கட்சியில் சீனியர்களின் ஆதிக்கத்தை குறைப்பதற்கான திட்டத்தை கனிமொழி - உதயநிதி இருவரும் சேர்ந்தே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதனடிப்படையிலேயே வயது வரம்பு நிர்ணயம்’

தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடுவோம் என்ற பெரும் கனவில் இருந்த திமுகவிற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பெரும் சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. விஜயை பெரிதாக கண்டுகொள்ளாததன் விளைவை இப்போது அனுபவித்து வருகிறது திமுக. இந்த சூழலில், திமுகவை மறுகட்டமைப்பு செய்யும் பணிகள் தீவிரமாக தொடங்கியிருக்கின்றன. ஏற்கனவே, தோல்வி குறித்து ஆய்வு செய்ய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட குழுவினர் கட்டு, கட்டாக காரணங்களை அடுக்கியிருக்கும் நிலையில், நடந்து முடிந்த செயற் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகளை அறிவித்து திமுகவின் மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

அதிருப்தியில் சீனியர்கள்

குறிப்பாக, 70 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி இனி இல்லை என்ற அறிவிப்பு பலரை கொதிப்படைய வைத்திருக்கிறது. குறிப்பாக, ஏ.வ.வேலு, முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளான 13 பேர் 70 வயதை கடந்தவர்களாக இருப்பதால் அவர்களது மாவட்ட செயலாளர் பதவிகள் பறிபோகவுள்ளன.

அதோடு, கிளைக் கழகச் செயலாளர், பேரூர் கழக செயலாளர், நகர செயலாளர்கள் என அனைவரும் அந்த பதவியில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்க முடியும் என்றும் அதற்கான வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது திமுக நிர்வாகிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக தலைமைக் கழகத்திலும் நடைபெறவிருக்கும் மாற்றம்

இந்நிலையில், திமுகவின் உயர்மட்டத்திலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெறவிருக்கின்றன. குறிப்பாக, திமுக தலைமைக் கழகத்தில் உள்ள பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தோல்விக்கு பின்னர் இணைந்த கரங்களாக செயல்படும் கனிமொழி - உதயநிதி

இப்படியான முடிவுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுப்பதற்கு உதயநிதியும், கனிமொழியும் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். கட்சியை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதிலும், கட்சியில் உள்ள சீனியர்களின் தலையீட்டையும் ஆதிக்கத்தையும் குறைக்கவும் இருவரும் இணைந்து கட்சிக்கான புதிய திட்டங்களை உருவாக்கியிருக்கின்றனர்.

செயல் தலைவரா ? பொதுச்செயலாளரா?

அதனடிப்படையில், விரைவில் கனிமொழிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படவிருக்கிறது. குறிப்பாக, திமுக பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகன் வயது மூப்பு தொடர்பாக துடிப்பாக செயல்பட முடியாத சூழலில் இருக்கும் நிலையில், அந்த முக்கியமான பொதுச்செயலாளர் பொறுப்பை கனிமொழிக்கு தருவது குறித்தும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கும் நிலையில், கட்சியின் செயல் தலைவர் பொறுப்பு ஒன்றை மீண்டும் உருவாக்கி அதனை தனக்கு தர வேண்டும் என கனிமொழி கேட்டிருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

துணைப் பொதுச்செயலாளராகும் உதயநிதி ஸ்டாலின்

அதோடு, துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக உதயநிதியை நியமிக்கவும், துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், ஏற்கனவே இருப்பவர்களை மாற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் திமுகவில் தீவிர ஆலோசனை சென்றுக்கொண்டிருக்கிறது.

எதிர்ப்பும் ; ஆதரவும்

கனிமொழிக்கு செயல் தலைவர் பொறுப்பு கொடுப்பதற்கு திமுகவின் சீனியர்கள் பலரும் ஆதரவளித்து வருவதாகவும், அதே நேரத்தில் அவருக்கு அப்படியான பதவி கொடுக்கப்படகூடாது என்று சிலர் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கியிருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கட்சியின் பொருளாளராக டி.ஆர்.பாலுவிற்கு பதில் ஏ.வே.வேலுவும் நியமிக்கப்படவிருப்பதாகவும் தெரிகிறது.

எது எப்படியிருந்தாலும் விரைவில் திமுக தலைமை நிர்வாகிகள் மாற்றம் நடைபெறவிருப்பது மட்டும் உறுதி.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி