📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 24, 2026 10:03 AM

Kanimozhi: உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.. தவெக எம்எல்ஏ

Kanimozhi: உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.. தவெக எம்எல்ஏ

Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டில் இருந்து தேர்தலில் வெற்றி பெறுவோமா? இல்லையா? என்று கேட்டு தனக்கு அழைப்பு வந்ததாக ஜோதிடரும், தவெக எம்எல்ஏ-வுமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுங்கட்சியான திமுக கடவுள் மறுப்பு கொள்கையை கூறி வந்தாலும், அந்த கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் பலரும் கடவுள் நம்பிக்கையுடனே உள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களுக்குச் சென்று வழிபாடும் செய்து வருகிறார்.

கடவுள் மறுப்பு கொள்கையில் திமுக-வின் செயல்பாடு எதிர்க்கட்சியினரால் பல முறை விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கவுண்டம்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தவெக எம்எல்ஏ கனிமொழி இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது,

உதயநிதி வீட்டில் ஜோசியம் பார்க்கச் சொன்னார்கள்:

எதிர்க்கட்சித் தலைவர் வீட்டில் இருந்து கூப்பிட்டு ஜெயிப்போமா? இல்லையா? என்று கேள்விகள் வருது. அவங்க எல்லாம் துரத்திடுவாங்க போல, அவர்கள் எல்லாம் ஜோதிடர் பார்க்கிறார்கள் அல்லவா? நீ போய் முதலில் உன் வீட்டில் உள்ள பெண்களை கேளுப்பா. அவங்க கூப்பிட்டு என்கிட்ட பேசுறாங்கப்பா. நான் ஆதாரம் வைத்துள்ளேன்.

பேசுன ஆதாரம் நான் வைத்துள்ளேன். உங்க வீட்டில் இருந்து யார் பேசுனாங்க? ஜெயிப்போமா? இல்லயா? என்று கேட்டது நீங்க. இன்று நீங்கள் நாங்கள் நாத்திகவாதி. நாங்கள் ஜோதிடம், ஜாதகம் நம்பமாட்டோம் என்று கூறுகிறீர்கள். முதலில் உங்க வீட்டில் இருப்பவர்களை திருத்துங்க. அப்புறம் நாட்டில் இருப்பவர்களை திருத்தலாம். மக்களின் வரிப்பணத்தில் நான் 26 கார் வாங்கி வச்சுருக்கேனா? இவங்கதான் பாத்தாங்க. பேசாமல் இருந்தால் அழகான பொம்மை என்கிறார்கள். இது ஆபத்தான பொம்மையும் கூட. தூரத்தில் இருந்து முகம் தெரியாமலே பேசிக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பெரும் பரபரப்பு:

சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி அடிப்படையில் ஒரு ஜோதிடர். இவர் ஜோதிடர் என்பதாலும். இவரது கடந்த கால வீடியோக்களை வைரல் செய்து இவருக்கு தேரதலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என்று தேர்தலுக்கு முன்பு பலரும் விமர்சித்திருந்தனர். ஆனாலும், இவர் வெற்றி பெற்றார்.

திமுக-வினர் பெரியாரின் கொள்கையை முழுவதும் பின்பற்றுவதாக கூறி வந்தாலும் ஜோதிட, ஜாதக நம்பிக்கை அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் பலருக்கும் இருப்பதாக தொடர்ந்து பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழலில், ஆளுங்கட்சி எம்எல்ஏ-விடம் உதயநிதி ஸ்டாலினின் குடும்பத்தினர் ஜாதகம் பார்க்க அணுகியிருப்பதாகவே ஜோதிடரும், எம்எல்ஏ-வுமான கனிமொழி கூறியிருக்கும் தகவல்கள் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி