Latest News
June 21, 2026 12:31 AM
கே.எஸ்.ஆர்.டி.சி.,
பெங்களூரு: கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குநராக தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சராக பைரதி சுரேஷ் பொறுப்பேற்றதையடுத்து, போக்குவரத்து கழகங்களில் முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அவ்வகையில், பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநராக பணியாற்றிய தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகுமார், கே.எஸ்.ஆர்.டி.சி., எனும், கர்நாடகா சாலை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
அதுபோல, பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குநர் பதவிக்கு, கர்நாடகாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரகுநந்தன் மூர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Latest News