📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 27, 2026 05:01 PM

கே பாக்யராஜ் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்

கே பாக்யராஜ் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பாக்யராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், திரைக்கதை மன்னன் என்று அனைவராலும் போற்றப்படும் கே. பாக்கியராஜ் அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி தமிழ்த் திரையுலகில் பெரும் ஆட்கொள்ளா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படமான சுவரில்லா சித்திரங்கள் தொடங்கி, முந்தானை முடிச்சு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு, அந்த 7 நாட்கள் என்ற காவியங்களை படைத்தவர். இன்றைய இளம் இயக்குனர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாய் நிகழ்ந்தவர். இந்திய சினிமாத்துறையில் திரைக்தை எழுதுவதில் முடிகுடா மன்னராக இருந்தவர். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம். மதியம் 28.06.2026 காலை 6-மணி முதல் மாலை 6-மணி வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.