📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 04, 2026 03:30 PM

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது; வானிலை மையம் அறிவிப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது; வானிலை மையம் அறிவிப்பு

புதுடில்லி: கேரளத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் பொதுவாக ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். இந்த மழைக்காலம் செப்டம்பர் வரை நீடிக்கும். ஆனால், இந்த ஆண்டு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலில் கணிப்பு வெளியிட்ட இந்திய வானிலை மையம், மே 26-ம் தேதியே கேரளாவுக்கு பருவமழை துவங்கும் என, அறிவித்திருந்தது.

ஆனால், 'எல் நினோ' எனப்படும், பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக முந்தைய கணிப்பை மாற்றியது. சில தினங்களுக்கு முன் இன்று கேரளத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதன் படி, இன்று கேரளத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.