📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 26, 2026 11:04 AM

கேரளத்தில் கால் பதிக்கும் த.வெ.க.

கேரளத்தில் கால் பதிக்கும் த.வெ.க.

செப்டம்பர் 8-ந்தேதியுடன் முடிவடையும் தமிழக சட்டசபை கூட்டத்தொடருக்கு பிறகு, 10-ந்தேதிக்கு மேல் சென்னையில் விஜய்யை நேரில் சந்தித்து பேசிய பிறகே இறுதி முடிவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய மலையாள திரைப்பட நடிகர் தேவன், முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தனக்கு கேரள மாநிலத் தலைவர் பதவியை வழங்க முன்வந்துள்ளதாக தெரி வித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டை தளமாக கொண்ட த.வெ.க., கட்சி கேரளத்திலும் தனது அரசியலை விரிவாக்கம் செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பா.ஜ.க.வில் சுமார் 5 ஆண்டுகள் இருந்தும் தமக்கு எவ்வித முக்கிய பொறுப்பும் வழங்கப்படாததால், மக்களுக்கு பங்காற்ற முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாகவே கடந்த ஆகஸ்ட் 16-ந்தேதி அன்று அந்த அமைப்பில் இருந்து விலகியதாக தேவன் சுட்டிக்காட்டினார்.

தாம் விலகிய தகவலை அறிவித்த மறுநாளே விஜய்யின் அலுவலகத்தில் இருந்து தம்மைத் தொடர்பு கொண்டு பேச விருப்பம் தெரிவித்ததாகவும், அன்றைய தினமே த.வெ.க. பிரதிநிதிகள் 2 பேர் நடிகை பிரியங்காவுடன் சாலக்குடியில் உள்ள தமது இல்லத்திற்கு நேரில் வந்து சுமார் 3 மணி நேரம் விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார்.

த.வெ.க.வில் இணைகிறார்

அதனைத்தொடர்ந்து த.வெ.க.வின் மூத்த தலைவர்கள் கூகுள் மீட் வழியாகவும் மேல்நிலைப் பேச்சுகளை நடத்தினர். இந்த ஆலோசனைகளின் மூலம் தனக்கும் விஜய்க்கும் இடையே எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் மக்கள் நலப்பணிகளில் ஒரே மாதிரியான பார்வைகள் இருப்பது தெளிவானதாக தேவன் தெரிவித்துள்ளார். எனவே இணைந்து செயல்படுவதில் எவ்விதச் சிக்கலும் இல்லை என்றும், தம்மை கேரள மாநிலத் தலைவராக பொறுப்பேற்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.

காங்கிரஸ் கட்சி உள்பட சில உள்ளூர் அமைப்புகளும் தம்மை தொடர்புகொண்டு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் தாம் அவற்றை ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

விஜய்யுடன் சந்திப்பு