Latest News
July 19, 2026 01:30 PM
கென்னத் ஜெயரத்னம் காலமானார்
சீர்திருத்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம், சனிக்கிழமை (ஜூலை 18) காலமானார். அவருக்கு வயது 67.
திரு கென்னத்தின் மறைவை அவருடைய மனைவி அமண்டா ஜெயரத்னம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் அறிவித்தார். குடும்பத்தினர் சூழ, திரு கென்னத் தூக்கத்தில் அமைதியாக உயிர் நீத்ததாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
“தற்போது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொள்ளும் சிறிய அளவிலான இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். அவரது வாழ்வைக் கொண்டாடும் வகையிலான நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு தேதியில் ஏற்பாடு செய்யப்படும்,” என்று அவர் அந்தப் பதிவில் எழுதியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Latest News