கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று தந்தார் மீராபாய் சானு!
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை சைகோ மீராபாய் சானு நாட்டிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், எதிராளிகளுக்குக் கடுமையான சவாலை அளித்து முதலிடத்தைப் பிடித்தார்.
இப்போட்டியில் மீராபாய் சானு ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ எடையையும் தூக்கினார். இதன் மூலம் மொத்தம் 190 கிலோ எடையைக் கடந்து அவர் இந்த தங்கப் பதக்கத்தைத் தன்வசமாக்கினார்.
இது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் மீராபாய் சானு வெல்லும் மூன்றாவது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது இந்த வரலாற்றுச் சாதனைக்கு ஜனாதிபதி, பிரதமர், இந்திய விளையாட்டு உலகமும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்