கிளப்பி விட்ட உதயநிதி.. வான்டடாக சிக்கிய சேகர்பாபு- அடித்து நொறுக்கிய ரமேஷ்-
கிளப்பி விட்ட உதயநிதி.. வான்டடாக சிக்கிய சேகர்பாபு- அடித்து நொறுக்கிய ரமேஷ்- பேரவையில் நடந்தது என்ன.?
Ramesh Vs Sekar Babu : கோயிலில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் கோயில் நிதியில் இருந்து மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுவது ஏன் என அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பிய நிலையில், சுற்றுலா பயணிகளுக்கான மல்டி லெவல் பார்க்கிங் அமைப்பதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என சேகர்பாபு பதிலளித்துள்ளார்.
கோயில் வருமானம்- மல்டி லெவல் கார் பார்க்கிங்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், அறநிலையத்துறை பள்ளி, கல்லூரிகள் நடத்தக்கூடாது என்பது பாஜகவின் நிலைப்பாடு, அந்த நிலைபாட்டில் அரசு உள்ளதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ,"கோவில் வருமானம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக செயல்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் கூறியிருந்ததாகவும், கோவில் நிதியை பயன்படுத்தி அங்கு கழிப்பறை உள்ளிட்ட கட்டுமானம் மேற்கெள்ளப்படும் எனக் கூறினோம் என்றும், கழிவறை வசதியில்லாத கோவிலுக்கு ரூ.10 கோடி மல்டி லெவல் கார் பார்க்கிங் எதற்கு தேவை? என கேள்வி எழுப்பினார்.
நாங்கள் யாருக்கும் B டீம் இல்லை
மேலும், திருமண மண்டபம் என கமர்ஷியல் பயன்பாட்டுக்காக அறநிலையத் துறை பணம் கடந்த ஆட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், பழனியில் சித்த மருத்துவமனை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தர தயாராக இருந்தது, ஆனால் கடந்த ஆட்சி தடுத்ததாகவும், தற்போது அதனை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளதாகவும் கூறினார். அதேபோல், நாங்கள் யாருக்கும் B டீமாக செயல்படு வேண்டிய அவசியமில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சேகர்பாபுவிற்கு ரமேஷ் பதில்
அப்போது குறிப்பிட்ட பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு, எம்எல்ஏக்களின் பரிந்துரை அடிப்படையில் தான் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், குன்னூரில் சுற்றுலா பயணிகளுக்கான மல்டி லெவல் பார்க்கிங் அமைப்பதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் என்பதால் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ், குன்னூர் விநாயகர் கோவில் நிலத்தில் கார் பார்க்கிங் பரிந்துரைத்தாலும் கோவில் நிதியில் செய்தது ஏன் என அமைச்சர் கேள்வி எழுப்பினார். கோவில் நிதியை எடுத்து கார் பார்க்கிங் அமையுங்கள் என பக்தர்கள் கேட்டார்களா? நிம்மதியான தரிசனம்தான் தேவை" என்றார். பெரிய கோவில்களில் மல்டி பார்க்கிங் என்பது அத்தியாவசியமான ஒன்றுதான், அது தேவையில்லா எனக்கூற முடியாது என எதிர்கட்சித்தலைவர் உதயநிதி கூறினார்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி