கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி!
பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க! என்று கூறியுள்ளார்.
‘முரசொலி’ நாளிதழின் 85-வது ஆண்டு விழாவை ஒட்டி அதன் அலுவலகத்திற்கு சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி!
அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!
தலைவர் கலைஞர், முரசொலி மாறன், முரசொலி செல்வம் என முரசொலியைத் தொடர்ந்து செழுமையாக வளர்த்தார்கள். நானும் முரசொலிக்காகப் பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு, அனைத்து நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன்.