📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 31, 2026 10:30 PM

கள்ள மௌனம் காக்கிறாரா? விஜயை சாடிய சிவசங்கர் !

கள்ள மௌனம் காக்கிறாரா? விஜயை சாடிய சிவசங்கர் !

கள்ள மௌனம் காக்கிறாரா? விஜயை சாடிய சிவசங்கர் !

தமிழ்நாட்டில் எந்தவொரு பிரச்சனைகள் நடந்தாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மௌன அரசியலை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றார். இது தமிழ்நாட்டின் சீர்கேடுக்கிற்கு தான் வழிவகுக்கும் என்று திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசியாதவது,உணர்வு பூர்வமான பிரச்சனைகளில் முதலமைச்சர் விஜய் கள்ள மௌனம் காப்பது சரியா? மக்கள் மத்தியில் பிரச்சனை ஏதும் வெடிக்காது என்று நினைக்கிறீர்கள். உங்க அமைதியால் ஒரு கட்டத்தில் புரட்டி வெடிக்கும் அதன் ஆபத்து உங்களுக்குத்தான் என்று கூறியுள்ளார்.முதலமைச்சர் என்றாலே என் நினைவிற்கு வருவது மு.க.ஸ்டாலின் தான். ஆனால் தற்போது உள்ள அரசு அவர்களின் இயலாமையை மறைக்கப்பதற்காகவே திமுக திட்டங்களின் பெயர்களை மாற்றி கொண்டு வருகின்றனர்.

நான் முதல்வன் திட்டம்,முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மற்றும் தாயுமானவர் திட்டம் மகளிர் விடியல் பயணம் போன்ற திட்டங்களை மாற்றவது தான் விஜயின் குறிக்கோளாக உள்ளது என்றும் புதிதாக திட்டங்கள் வகிக்க எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

"கலரை மாற்றுவது, பெயரை மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மக்கள் மனதில் எதிர்ப்புதான் உருவாகும். மின்சாரத்துறையில் உள்ள பிரச்சனைகளை முழுமையாக ஆய்வு செய்யாமல், தினமும் வாட்ஸ்அப் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆளுங்கட்சி கருத்து தெரிவிப்பது சரியல்ல. கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் எழாத மின் தட்டுப்பாடு, தற்போது ஏன் ஏற்பட்டுள்ளது என்பதை அரசு விளக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது எதிர்க்கட்சியின் கடமை" என்றார்.

மேலும், "அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் அமைச்சரவையின் 'மவுத்பீஸ்' போல செயல்படுகிறார். ஆனால் அவரது துறை தொடர்பாக கேள்வி எழுப்பினால் பதில் அளிக்க முடியவில்லை. மற்றவர்களை விமர்சிப்பதையும் நையாண்டி செய்வதையும் விட்டுவிட்டு, ஆக்கபூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், தற்போது தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று கூறியுள்ளார். அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலையில் சந்திப்பை வேறு ஒரு நேரத்தில் நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக அரசு இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள்கூட விஜயின் கர்நாடக பயணம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளன. இருந்தும் அரசு தொடர்ந்து மவுனம் காக்கிறது" என்றார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய், ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, தற்போதைய சூழ்நிலையில் அந்த பயணத்தை ஒத்திவைக்குமாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் வெளியிடவில்லை.