📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 25, 2026 08:01 AM

 கல்லை தமிழ் சங்கம் சார்பில் சொற்பொழிவு

 கல்லை தமிழ் சங்கம் சார்பில் சொற்பொழிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ்ச்சங்கம் சார்பில் இலக்கிய தொடர் சொற்பொழிவு மற்றும் கவியரங்கம் நடந்தது.

சங்கத் தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நல்லாப்பிள்ளை, அருணா தொல்காப்பியன், கோவிந்தன் முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பாளர் கலைமகள் காயத்ரி வரவேற்றார்.

துணை தலைவர் கோவிந்தராஜன், ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், டாக்டர் நடேசன் ஆகியோர் திருக்குறள் அதிகார உரை மற்றும் புறநானுாறு, கம்பராமாயணப் பாடலுக்கு விளக்கம் அளித்தனர்.

இதனையடுத்து 'பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பைந்தமிழ்த் தொண்டு' என்ற தலைப்பில் பகுத்தறிவு இலக்கிய மன்றத் தலைவர் ஜெயராமன் பேசினார். தொடர்ந்து ஆராவமுதன் தலைமையில் 'கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

விழாவில், அருள்ஞானம், சண்முகம், பொன்னப்பிள்ளை, சாதிக் பாட்சா, ராபியா பேகம், பாரதி கிருஷ்ணன், ராமமுத்துசாமி, வெங்கடாசலபதி உட்பட பலர் பங்கேற்றனர். விழாவை செயலாளர் மதிவாணன் தொகுத்து வழங்கினார்.

இணை செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.