Politics
November 29, 2026 11:01 PM
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஜாமின் கோரி மனு; டிசம்பர் 1ல் விசாரணை
- நமது நிருபர் -
பெண் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவரை கடலூர் மத்திய சிறையில் 14 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். கடலூர் மத்திய சிறையில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
தற்போது கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி எம்எல்ஏ அருள்விக்னேஷ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமின் மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு அறிவிப்பு ஆணை அனுப்பியது. ஜாமின் மனு மீதான விசாரணை டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Politics