📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 02, 2026 04:00 AM

கம்பன் விழா 2026

கம்பன் விழா 2026

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கம்பன் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) மாலை 6.30 மணிக்கு தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்திலுள்ள பாசிபிலிட்டி அறையில் நடைபெறவிருக்கிறது.

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபைத் தலைவர் ராஜகுமார் சந்திரா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

விழாவில் சிறப்பு அங்கமாக, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் ந.செல்லக்கிருஷ்ணன், ‘நடையின் நின்றுயர் நாயகன்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கிறார்.

கழகத்தின் இளையர் பிரிவின் செல்வி வைஷ்ணவி கண்ணன், ‘கம்பன் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள்’ எனும் தலைப்பில் சிற்றுரையாற்ற உள்ளார்.

கம்பன் விழாவையொட்டி, மாணவர்களுக்கு காஹுட் வழியாகப் புதிர்ப் போட்டி நடத்தப்பட்டது. உயர்நிலை 1, 2, உயர்நிலை 3, உயர்நிலை 4, 5, உயர்கல்வி நிலையங்கள் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் பங்குபெற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்களின் ‘தாடகை வதைப் படலம்’ ராமாயண குறுநாடகமும் இடம்பெறும்.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிச்சுவையைப் பருகவும் இனிய தமிழைச் சுவைக்கவும் இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழன்பர்கள் என அனைவரையும் எழுத்தாளர் கழகம் அழைக்கிறது.

மேல்விவரங்களுக்கு, கழகத்தின் தலைவர் சு.முத்துமாணிக்கம் 9773 2750 அல்லது செயலாளர் பிரேமா மகாலிங்கம் 9169 6996 இருவரையும் தொடர்புகொள்ளலாம்.