📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 02, 2026 08:04 AM

திருச்செந்தூரில் கடல் சீற்றம்: புனித நீராடிய 5 பக்தர்களின் கால் முறிந்தது

திருச்செந்தூரில் கடல் சீற்றம்: புனித நீராடிய 5 பக்தர்களின் கால் முறிந்தது

தூத்துக்குடி,

திருச்செந்தூரில் அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தின, பிந்தின சில நாட்களில் கடல் உள்வாங்குவது வாடிக்கையாக நிகழ்கிறது. மேலும் கடல் அலைகளும் அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் திருச்செந்தூரில் இன்று அதிகாலையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. சுமார் 10 அடி உயரம் வரையிலும் ராட்சத அலைகள் எழும்பி கரையை தாக்கின.

அப்போது கடலில் புனித நீராடிய சில பக்தர்கள் நிலைதடுமாறி விழுந்தனர். அங்கு கடலின் அடியில் பாறைகளாக இருந்ததால், அதில் மோதியதில் 5 பக்தர்களின் கால் எலும்பு முறிந்தது.

இதில் படுகாயமடைந்து தத்தளித்த திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த குணசேகரன் (45 வயது), கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சரோஜா (42 வயது), திருச்சியைச் சேர்ந்த இலஞ்சியம் (55 வயது), புதுக்கோட்டையை சேர்ந்த ராஜகுமாரி (52 வயது), கிருஷ்ணவேணி (75 வயது) ஆகிய 5 பேரை போலீசார் விரைந்து சென்று மீட்டனர்.

படுகாயமடைந்த 5 பக்தர்களையும் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.