கண்ணீர் விட்டு கெஞ்சியும் தூக்கிய பிக் பாஸ்.. பிளாக் பாண்டி வெளியேற்றத்தில் சதியா?
சென்னை: 19 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'பிக் பாஸ் தமிழ் சீசன் 10' நிகழ்ச்சியில், ரசிகர்கள் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவமாக போட்டியாளர் பிளாக் பாண்டி இரண்டே நாட்களில் வீட்டை விட்டுத் தூக்கப்பட்டுள்ளார். சர்க்கரை அளவு அதிகரித்து இன்சுலின் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், பிக் பாஸ் அவரை வெளியேற்றியுள்ளார். ஆனால், பிக் பாஸ் டீமின் இந்த அதிரடி முடிவுக்கு உண்மையாக இருக்கும் காரணம் இதுதானா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தயவு செஞ்சு அனுப்பாதீங்க: பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்களே ஆனாலும், கிச்சன் பொறுப்பை ஏற்று, அனைவரிடமும் பாசமாக பழகி நன்மதிப்பை பெற்ற பிளாக் பாண்டியை பிக் பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து, உங்களால் தொடர்ந்து வீட்டில் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார். இதை கேட்டதும் உறைந்துபோன பிளாக் பாண்டி, கதறி அழுதபடி கண்ணீர் மல்க கெஞ்சினார். சார் கடந்த 6 மாசமா சில பிரச்சனையால என் உடம்பை என்னால் கவனிக்க முடியல. எனக்கு ஒரே ஒரு வாரம் டைம் கொடுங்க. என் உடம்பை தயார் பண்ணிக் காட்டுறேன்.
பிளாக் பாண்டி கண்ணீர்: இந்த வாய்ப்பு எனக்கு ரொம்ப முக்கியம் பிக் பாஸ்... என்னால 106 நா:ளும் கண்டிப்பா இருக்க முடியும். என்னைக் தயவுசெஞ்சு வெளியே அனுப்பாதீங்க... எனக்கு எதுவும் ஆகாதுனு நானே வீடியோ ஆவணமா தருகிறேன் என் வாழ்க்கையில் இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமான வாய்ப்பு, என் வெளியில் அனுப்பிடாதீங்க என கைகூப்பி கெஞ்சி அழுதார். ஆனால், பிக் பாஸ், பாண்டி நீங்கள் எனக்கு மிகவும் முக்கியம், உயிரை வைத்து விளையாட முடியாது என கூறி பிக் பாஸ் அவரை வெளியேற்றினார்.
நெட்டிசன்கள கேள்வி: பிளாக் பாண்டியின் இந்த நெகிழ்ச்சியான வீடியோ வெளியானதை தொடர்ந்து, இணையத்தில் பிக் பாஸ் அணிக்கு எதிராக பலர் கேள்விகளை கேட்டு வருகின்றனர். போட்டியாளர்களை தேர்வு செய்யும் முன் இரத்த பரிசோதனை, மருத்துவ வரலாறு என அனைத்தையும் செக் பண்ணிட்டுதானே உள்ள அனுப்புவீங்க? அப்புறம் எதுக்கு இரண்டே நாள்ல பாண்டியை வெளியேத்தணும்?
சர்க்கரை நோய் ஒரு சாக்கா?: சர்க்கரை நோய் இந்த உலகத்தில் எல்லாருக்கும் இருக்கு, பிக் பாஸ் வீட்டிலேயே மருத்துவர்கள் இருக்கும்போது, இன்சுலின் கொடுத்து அவரை தொடர்ந்து விளையாட வைத்து இருக்கலாமே? எதற்கு இவ்வளவு அவசரம்? என நெட்டிசன்கள் பிக் பாஸ் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர். பிளாக் பாண்டி வெளியேறியதை தொடர்ந்து, அவர் விட்டு சென்ற இடத்தை நிரப்ப 'காமன் மேன்' போட்டியாளரான மணிவண்ணன் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.