கோவை, நீலகிரியில் இன்று கனமழை
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிக்கை:
தமிழக கடலோர பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது.
அதனால், இன்றும் நாளையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யலாம்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், மதுரை, திருப்பத்துார் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; மாலை, இரவு நேரங்களில், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம்.
இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டு உள்ளது.