கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் இந்த அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு தற்போது அதிகரிக்கப்பட்டு உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 2,498 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 4,812 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல கபினி அணையில் இருந்து 6,100 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 6,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு 11,321 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.