📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 08, 2026 06:33 AM

கருணாநிதியின் 8

கருணாநிதியின் 8

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.படம்: ம.பிரபு

சென்னை: முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் 8-ம் ஆண்டு நினைவு தினத்​தையொட்​டி, திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அமை​திப் பேரணி நடை​பெற்​றது.

முன்​னாள் முதல்​வர் மு.கருணாநி​தி​யின் 8-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழகம் முழு​வதும் அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, திமுக சார்​பில் சென்னை வாலாஜா சாலை​யில் நேற்று அமை​திப் பேரணிக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது.

முன்​ன​தாக, ஓமந்​தூ​ரார் வளாகத்​தில் அமைந்​துள்ள கருணாநிதி சிலை​யின் கீழ் வைக்​கப்​பட்​டிருந்த உரு​வப்படத்​துக்கு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். கட்சி நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அமை​திப் பேரணி தொடங்​கியது. ஓமந்​தூ​ரார் வளாகத்​தில் தொடங்​கி, வாலாஜா சாலை வழி​யாக மெரினா கடற்​கரை​யில் உள்ள கருணாநிதி நினை​விடம் வரை பேரணி நடை​பெற்​றது. மெரினா கடற்​கரை​யில் உள்ள மறைந்த முன்​னாள் முதல்​வர் அண்​ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் நினை​விடத்​தில் மலர் வளை​யம் வைத்​தும், மலர் தூவி​யும் மு.க.ஸ்டா​லின் மரி​யாதை செலுத்​தி​னார்.

கருணாநி​தி​யின் நினைவு தினத்தையொட்​டி, முதல்​வர் மு.க.ஸ்​டாலின் சமூக வலைதள பக்​கத்​தில், ‘எண்பது ஆண்​டு ​காலப் பொது வாழ்க்​கைக்​குச் சொந்​தக்​காரர், தமிழகத்​தின் தலை​யெழுத்தை மாற்​றிய​வர், நவீனத் தமிழகத்தை உரு​வாக்​கிய சிற்​பி. அரசி​யலும் ஆட்​சி​யும், கலை​யும் இலக்​கிய​மும், திரை​யும் நாடக​மும், சின்​னத்​திரை​யும் சமூக வலைத்​தள​மும் என அனைத்​துத் தளங்​களி​லும் கோலோச்​சிய நிரந்​தரத் தமிழ் ஆளு​மை.

கருப்​புக் கண்​ணாடி​யும் கரகரத்த குரலு​மாய் நம் நினை​வு களில் நிலைத்​திருக்​கும் கருணாநி​தி, உடலால் விலகி நம் உள்​ளங்​களில் நிரந்​தரமென நிறைந்த நாள் இன்​று. அவர் தான் நமக்கு எல்​லாம்.அவரின்றி நாம் இல்​லை’ என தெரி​வித்​துள்​ளார்.

எதிர்​கட்​சித் தலை​வர் உதயநிதி தனது சமூக வலைதள பக்​கத்​தில் ‘என் உயி​ரினும் மேலான அன்பு உடன்​பிறப்​பு​களே..’ என்ற காந்​தக் குரலால், நம்மை நிறைத்த கருணாநிதி வழிநின்​று, அவதூறுகளை​யும் அடக்​கு​முறை​களை​யும் துணிந்து எதிர்ப்​போம், எளிய மக்​களின் உயர்​வுக்கு உடன் நிற்​போம், ஆதிக்​கத்தை உறு​தி​யுடன் எதிர்த்​து, கழக தலை​வர் மு.க.ஸ்டா​லின் தலை​மை​யில், தமிழகத்​தின் உரிமை​களை வென்​றெடுப்​போம்’ என்று கூறி​யுள்​ளார்.

திமுக துணைப் பொதுச் செய​லா​ளர் கனி​மொழி வெளியிட்டுள்ள பதிவில், ‘திட்​டங்​களி​லிருந்து அவர் பெயரை நீக்​கு​வது எளி​தாக இருக்​கலாம். ஆனால், நவீன தமிழகத்​தின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடி​யாது. அந்த வரலாற்​றின் முதல் வரி​யிலேயே, “இதற்கு விதை​யிட்​டவர்​ தலை​வர்​ கருணாநி​தி” என்​று எழுதப்​பட்​டிருக்​கிறது’ என்று தெரிவித்துள்ளார்.