கருப்பு தான் நம்பர் ஒன்: ஜன நாயகன் மொத்த வசூல் இதுதான்.. வெளியான பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் சூர்யாவின் கருப்பு தான் இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய படமாக உள்ளது என்றும் உலகளவில் ஜன நாயகன் அதிக வசூலை ஈட்டினாலும் கருப்பு படத்தின் தமிழ்நாட்டு வசூல் சாதனையை முறியடிக்கவில்லை என பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர் ராஜசேகர் ஜன நாயகன் படத்தின் இறுதி வசூல் அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
கேவிஎன் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன், நிழல்கள் ரவி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜன நாயகன் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது.
இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் மொத்த வசூல் குறித்த அறிவிப்பை ராஜசேகர் வெளியிட்டுள்ளார். பொங்கலுகு இந்த படம் திட்டமிட்டப்படி வந்திருந்தால் 700 கோடி வரை அசால்ட்டாக வசூல் செய்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஜன நாயகன் இறுதி வசூல்: இதுவரை ஜன நாயகன் திரைப்படம் 325 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டியுள்ளது என ராஜசேகர் வீடியோ வெளியிட்டு கூறியுள்ளார். கேவிஎன் தயாரிப்பில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யின் கடைசி படம் என்பதால் அவருடைய சம்பளம் மட்டுமே சுமார் 270 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டது. ஆனால், படத்தின் ரிலீஸ் தாமதமான நிலையில், கேவிஎன் நிறுவனத்திடம் சம்பளத் தொகையை விஜய் மொத்தமாக வாங்கியிருக்க மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் கருப்பு முதலிடம்: இந்த ஆண்டு வெளியான படங்களில் ஜன நாயகன் மற்றும் கருப்பு என இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களும் பாக்ஸ் ஆபீஸை ஏமாற்றாமல் 300 கோடி வசூலை சாத்தியமாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஜன நாயகன் திரைப்படம் 150 கோடி வசூலும் ஷேர் அடிப்படையில் 80 கோடி என்றும் கர்நாடகாவில் 30 கோடி ரூபாய், கேரளாவில் 16.5 கோடி ரூபாய், இந்தியில் 23 கோடி ரூபாய், தெலுங்கில் கணிசமான தொகையை இந்த படம் வசூல் செய்துள்ளது என்றார். ஆனால், தமிழ்நாட்டில் கருப்பு தான் முதலிடம் என்றும் உலகளவில் வசூலில் கருப்பு படத்தை சற்றே ஜன நாயகன் முந்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முந்துமா?: ஜன நாயகன் உலக வசூலை விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முந்துமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இதுவரை வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் 3 நாட்களில் 121 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சம் 200 கோடி வரை தொடும் என்கின்றனர். ஆனால், கருப்பு, ஜன நாயகன் அருகே வருவது டவுட்டு தான் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.