கருப்பு வெற்றிக்குப் பிறகும் கூட கண்டுக்கலையே.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டிக்கெட் புக்கிங் எப்படி?
சென்னை: தெலுங்கு இயக்குநர்கள் தமிழ் ஹீரோக்களை வைத்து படம் எடுத்தாலே அது தெலுங்கு படமாகவே இருக்கும் என்கிற மனநிலை தொடர்கிறதா? என்கிற கேள்வியையே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஆரம்ப டிக்கெட் புக்கிங் ஸ்டேட்டஸ் எழுப்புகிறது.
இந்த ஆண்டு இதுவரை அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் கருப்பு திரைப்படம் முன்னிலை வகித்து வருகிறது. சமீபத்தில் தான் கருப்பு திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் கர்ஜித்த நிலையில், சூர்யாவின் அடுத்த படத்தின் டிக்கெட் புக்கிங் நேற்று தொடங்கிய நிலையில், இந்நேரம் ஹவுஸ்ஃபுல் ஆகியிருக்கும் என்று பார்த்தால் இதுவரை முதல் காட்சிக்கான டிக்கெட் கூட பல தியேட்டர்களில் பச்சை நிறத்தில் காட்சியளிப்பது தான் வேதனையளிக்கிறது.
இதற்கு முன்பாக கூட லக்கி பாஸ்கர், தனுஷ் நடித்த குபேரா உள்ளிட்ட படங்களுக்கும் தமிழ்நாட்டில் இதே நிலை தான் நீடித்தன.படம் வெளியாக இன்னமும் 2 தினங்கள் உள்ள நிலையில், இன்று டிக்கெட் புக்கிங் ஃபயர் மோடுக்கு மாறுகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
குறைவான தியேட்டர்கள்: கடந்த வாரம் வெளியான டிசி படத்துக்கே ஜன நாயகன் படம் ஓடிக்கொண்டிருப்பதால் பல இடங்களில் ஒரு ஷோ மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால், படத்தின் ரிசல்ட் பிளாக்பஸ்டராக திரும்பிய நிலையில், அதிரடியாக தியேட்டர்களின் எண்ணிக்கையும் ஸ்க்ரீன்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கிடைத்த குறைந்த காட்சிகளின் வழியாகவே 50 கோடி வசூலை அசால்ட்டாக டிசி திரைப்படம் கடந்துள்ளது. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் எப்படி இருந்தாலும் சூர்யா படத்துக்கு அதிகளவில் தியேட்டர்களையும் ஸ்க்ரீன்களையும் ஒதுக்க அனுமதிக்குமா? தியேட்டர் ஓனர்கள் டிசி படத்தை தூக்கிவிட்டு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் மகுடம் உள்ளிட்ட படங்களுக்கு அதிகளவில் ஸ்க்ரீன்களை ஒதுக்குவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பச்சை நிறத்தில் டிக்கெட் புக்கிங்: நேற்று மாலை 6 மணிக்கே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துக்கான டிக்கெட் புக்கிங் ஆரம்பமானது. ஆனால், இன்னமும் அன்பான ஃபேன்ஸ் ஆரஞ்சு மற்றும் ஹவுஸ்ஃபுல் புரட்சி பண்ணாமல் அப்படியே பச்சை நிறத்திலேயே டிக்கெட் புக்கிங்கை வைத்திருப்பது படக்குழுவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டிரைலர் ஈர்க்கவில்லையா?: சூர்யாவின் சூடான சுவையான புரமோஷன்கள் மற்றும் சமீபத்தில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டிரைலர் உள்ளிட்டவை ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லையா? அல்லது இதை முற்றிலும் தெலுங்குப் படம் என்கிற கோணத்திலேயே இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து வருகிறார்களா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. இன்று இரவுக்குள் டிக்கெட் புக்கிங் ஸ்டேட்டஸ் சூடு பிடித்தால் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஓபனிங் சிறப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.