📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 29, 2026 05:03 AM

ஆதவ் அர்ஜூனா வீட்டு முன்பு அக்டோபர் 6ம் தேதி போராட்டம்: பட்டய பொறியாளர் சங்கம் அறிவிப்பு

ஆதவ் அர்ஜூனா வீட்டு முன்பு அக்டோபர் 6ம் தேதி போராட்டம்: பட்டய பொறியாளர் சங்கம் அறிவிப்பு

ஆதவ் அர்ஜூனா வீட்டு முன்பு அக்டோபர் 6ம் தேதி போராட்டம்: பட்டய பொறியாளர் சங்கம் அறிவிப்பு

விருதுநகர்: நெடுஞ்சாலைத்துறையில் நீடிக்கும் நிர்வாக குளறுபடிகளை சரிசெய்யக் கோரி வரும் அக்.6ம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வீட்டு முன்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை: நெடுஞ்சாலைத்துறையில் கடந்த 4 மாதங்களாக நிர்வாக குளறுபடிகள் நீடித்து வருகின்றன.

உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள் பணியிட மாறுதல் வெளிப்படையாக நடைபெறவில்லை. குறிப்பாக ஒரே இடத்தில் 5 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்தவர்களை தற்போது வரை பணியிட மாறுதல் செய்யவில்லை. மேலும் பல்வேறு பணிநிலை அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கக்கூடிய பதவி உயர்வுகள் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை. மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.

புதிய சாலை மற்றும் பால பணிகள் சம்பந்தமாக மதிப்பீடு தயார் செய்வதற்கு உரிய செலவினங்களை உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்கள் எந்த அடிப்படையில் பெற வேண்டும் என்ற நிர்வாக உத்தரவுகள் இல்லை. இதனால் பல ஆயிரம் செலவு செய்த உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் பெரும் மனஉளைச்சலில் உள்ளனர். எனவே, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வீடு முன்பு அக்.6ம் தேதி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.